அதிகாரியின் கழுத்தில் அரிவாள்; தனது பொருட்களை மீட்ட பெண்

அதிகாரியின் கழுத்தில் அரிவாள்; தனது பொருட்களை மீட்ட பெண்

1 mins read
2d6fa82b-80c8-4dba-bbdd-9e2819b2e0a6
-

மும்பை: மும்பையின் விரார் பகுதியில் ஆயுதபூஜை வருவதை யொட்டி வீதியிலிருக்கும் கடை களை அகற்றும் பணியில் மாநக ராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்த னர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, வசாய்=விரார் மாநகராட்சி அதிகாரி பிரபாகர் போயர் தலை மையில் நேற்று நடைபெற்றது. அவ்வேளையில் அங்கு குளிர் பானம் விற்கும் பிரமிளா என்ப வரின் கடையிலிருந்து குளிர் சாதனப்பெட்டி, பழங்கள் போன்ற வற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அவ்வாறு செய்யவேண்டாம் என்றும் தான் அபராதம் கட்ட தயாராக இருப்பதாகவும் அதிகாரி களிடம் பிரமிளா கேட்டுக்கொண் டார். அவரது வேண்டுகோளை ஏற்காமல் பொருட்களை வாகனத் தில் ஏற்றிக்கொண்டு சென்ற அதிகாரிகளை, பிரமிளா தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி மடக்கினார். கையில் அரிவாளுடன் சென்ற பிரமிளா, பிரபாகரின் கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்டுச்சென்றார். அரிவாள் கழுத்தில் வைக்கப் பட்டதால் அந்த நேரத்தில் பொருட் கள் அவரிடம் கொடுக்கப்பட்டு, பிறகு போலிசிடம் புகார் கொடுக் கப்பட்டது. பின், பிரமிளா கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

அரிவாளை அதிகாரியின் கழுத்தில் வைத்த பிரமிளா. படம்: இந்திய ஊடகம்