திறக்கப்படவிருந்த அணை கடைசி நேரத்தில் உடைந்தது

திறக்கப்படவிருந்த அணை கடைசி நேரத்தில் உடைந்தது

2 mins read

பீகார்: பீகார் மாநிலம், பாகல்பூர் அருகே கடந்த 40 ஆண்டுகளாக ரூ.389 கோடி செலவில் கட்டப்பட்டுவந்த பதேஸ்வரத்தான் கங்கை அணை நேற்று புதிதாக திறக்கப்படவிருந்தது. பீகார்-ஜார்கண்ட் இணைந்து கட்டிய அந்த அணையை பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்துவைப்பார் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட அணையின் முன்னோட்ட சோதனையின் போது, கங்கை நதியிலிருந்து முழு வேகத்தில் வந்த அதிகப் படியான நீர்வரத்தால் தடுப்பணை யின் ஒரு பகுதி திடீரென உடைந் தது. இச்சம்பவத்தால் முதலமைச் சரின் வருகை ரத்துசெய்யப்பட்டுள் ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணை உடைப்பு ஏற்பட்டவுடன் அரசு அதிகாரிகள் சம்பவ இடத் துக்குச் சென்று, அணை உடைப் பால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அணை உடைப்பு காரணமாக கஹல்கான் பகுதியின் குடியிருப்புப் பகுதி களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீர் பெறவும் நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் கட்டுமானப் பணி, 1977ஆம் ஆண்டு ரூ. 13.88 கோடி மதிப் பீட்டில் தொடங்கப்பட்டது. அணை யில் புதிதாக கட்டப்பட்ட பகு திக்கு எதுவும் நேரவில்லை என்றும் பழைய பகுதியில்தான் உடைப்பு ஏற்பட்டதாகவும் பீகார் மாநில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இச்சம்பவத் திற்கு முதலமைச்சர் நிதீஷ்குமா ரின் ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என்று பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.