சென்னை: மாநில அரசுகளின் அதிகாரங்களைத் தட்டிப்பறிக்க மத்திய பாரதிய ஜனதா அரசு முயற்சி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எம்எல் ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுவது போல தோன்றுவதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலையைக் கொண்டு வருவதே மத்தியில் ஆள்பவர்களின் நோக் கமாக உள்ளது எனவும் சாடி னார்.
கல்வி தொடர்பான அதிகாரங் களை முழுமையாகப் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அவர் புகார் எழுப்பினார். "சபாநாயகர் தனபாலின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமான ஒன்று. எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த வழக்கில் உயர் நீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்கா விட்டால் மேல்முறையீடு செய்ய உள்ளோம். "இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பங்களிப்பும் இருப்பதாக எண்ணத் தோன்று கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடகம் ஆடுவது போலவும் நினைக்கத் தோன்று கிறது," என்றார் திருமாவளவன். முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசிய அவர், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

