தங்க.தமிழ்செல்வன்: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது நியாயமற்ற செயல்

தங்க.தமிழ்செல்வன்: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது நியாயமற்ற செயல்

1 mins read
69975cfa-336b-4458-84b3-e976c4e0787c
-

குடகு: கடந்த சில தினங்களாக வெளியே தலைகாட்டாமல் கர்நா டகா மாநிலம், குடகு பகுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள், ஊர் திரும்ப தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் மேற் கொண்ட நடவடிக்கை நியாயமற் றது என்று குறிப்பிட்டுள்ள எம்எல்ஏக்கள் 18 பேரும், இது தொடர்பான வழக்கை எதிர்கொள் ளும் திடம் தங்களுக்கு இருப்ப தாகக் கூறியுள்ளனர். தனக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களை முதலில் புதுவை யில் தங்க வைத்திருந்தார் டிடிவி தினகரன். பின்னர் அங்கிருந்து கர்நாடகாவின் குடகு பகுதிக்கு எம்எல்ஏக்கள் அழைத்துச் செல் லப்பட்டனர். அங்கு தினகரனின் நண்பர்களுக்குச் சொந்தமான சொகுசு தங்கு விடுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

"தினகரனை ஆதரிக்கிறோம் என்பதற்காக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதை தவறு என்றே அனைத்து தரப் பினரும் கூறுகின்றனர். யாரும் அதை நியாயப்படுத்த மாட்டார்கள். "கட்சி ரீதியாக பார்க்கும்போது நாங்களும் அதிமுகவினர்தான். எங்களை தகுதி நீக்கம் செய் திருக்க வேண்டியதில்லை," என்றார் தங்க தமிழ்செல்வன்.