திருமுருகன் காந்தி: தமிழர்கள் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது

திருமுருகன் காந்தி: தமிழர்கள் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது

1 mins read
de8803e9-a689-4bd1-aa63-5edbf2ff7499
-

சென்னை: கதிராமங்கலம், நெடுவாசல், நீட் எனப் பல பிரச் சினைகளில் தமிழர்கள் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ள தாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் கைதான இவர், நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மத்திய அரசின் அடிமையைப் போல் செயல்படுவதாக விமர்சித்தார். "அதிமுக அரசை அகற்ற வேண்டும். எங்களுக்கு என்ன தண்டனை அளித்தாலும் தமிழ்த் தேசியத்துக்கான எங்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும்," என்றார் திருமுருகன் காந்தி.