துரோகத்தால் நியாயத்தை வென்றதாக சரித்திரமில்லை: நாஞ்சில் சம்பத்

துரோகத்தால் நியாயத்தை வென்றதாக சரித்திரமில்லை: நாஞ்சில் சம்பத்

1 mins read
1c5359a3-3310-47bd-b9b1-dcc779496ec1
-

நெல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டதாக தினகரன் ஆதரவா ளரும், அதிமுக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முதல்வர் எடப் பாடியின் தனது நாற்காலி கனவால் கட்சிக்குத் துரோகம் செய்தவர்க ளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். நீதியை நீண்ட நாள்களுக்கு மறைக்க முடியாது என்று குறிப் பிட்ட அவர், துரோகத்தால் நியா யத்தை வென்றதாக சரித்திரம் கிடையாது என்றார். "தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் நீராடி இருக்கிறார். அவர் செய்த துரோகத்தை எந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும் தீர்க்க முடியாது. அவர் நீராடியதால் காவிரி அழுக்காகி விட்டது," என் றார் நாஞ்சில் சம்பத்.