சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் மாநில நதி நீர் விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய இருவரும் சம்மதித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு முதல்வர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "தமிழக, கேரள மக்கள் சகோதர, சகோதரிகளாக நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ்கின்றனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.2017-09-22 06:00:00 +0800
தமிழக, கேரள முதல்வர்கள் சந்திப்பு
1 mins read
-

