சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளில் நேற்று மதியம் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் ஏழு இடங்களில் ஒரே சமயத்தில் சோதனை மேற் கொள்ளப்பட்டது. ராமகிருஷ்ணா நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் தேர்தலின்போது அவரது வரவு, செலவு கணக்கு களைக் கவனித்து வந்தவருமான ஆர்த்தி சுவாமிநாதனுக்குச் சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உட்பட அவரது நண் பர்கள் உள்ள இரு வேறு இடங் களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள தமிழக முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள் ளார். டிடிவி தினகரன் முகாமில் உள்ள எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர். தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் பலரைக் கைது செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டு உள்ள தாகக் கூறப்படும் நிலையில் முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

