தமிழக அமைச்சர்கள் பேசாமல் இருப்பதே நல்லது: நீதிபதி கிருபாகரன் அறிவுரை

தமிழக அமைச்சர்கள் பேசாமல் இருப்பதே நல்லது: நீதிபதி கிருபாகரன் அறிவுரை

2 mins read

சென்னை: நீட் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் எந்தவிதமான பேட்டியும் கொடுக்காமல் இருப்பது நல்லது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளர். நீட் தேர்வு மற்றும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தங்கள் தமிழக மெங்கும் பரவலாக நடைபெற்று வருகின்றன. இந்த வேலைநிறுத்தங்கள் தொடர்பான வழக்குகளை நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வில் விலக்கு கிடைக் கும் என்று பேசிப் பேசியே ஓர் உயிரை இழந்துவிட்டோம். இனி மேல், நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்காதீர்கள். "மாணவர்களுக்கு கவுன்சி லிங் வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அரசுக்கு ஒருமணி நேரம்கூட போதும்," என்று நீதிபதி கூறினார்.

மேலும் அவர், "நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத மாண வர்களை அடுத்த ஆண்டு தேர் வுக்குத் தயார்ப்படுத்தும் விதமாக பயற்சி மையங்கள் அமைக்கப்பட் டனவா? ஜாக்டோ=ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதர வளித்த கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கு குரல் கொடுக்காதது ஏன்? "நீதிமன்ற உத்தரவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தவர் கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டத் தின்போது மாணவர்களை வீட் டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?," என்று அவர் பல கேள்வி களை எழுப்பினார். மேலும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையை விமர்சிப்பது சரியல்ல என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத் தளங்களில் நீதிமன்றத்தை விமர் சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன்படி, தமிழக அரசு எடுத் துள்ள அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபா கரன் உத்தரவிட்டார்.