சிலை கடத்தல் கும்பல் சிக்கியது; பதுங்கியிருந்து கைது செய்தது போலிஸ்

சிலை கடத்தல் கும்பல் சிக்கியது; பதுங்கியிருந்து கைது செய்தது போலிஸ்

1 mins read

திருவண்ணாமலை: சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடு களுக்கு கடத்த இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத சிலை, ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் பறிமுதல் செய்துள் ளனர். திருவண்ணாமலை பகுதியில் இருந்து சிலைகள் கடத்தப்படு வதாகத் தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் சிலை கடத் தல் தடுப்புப் போலிசார் திரு வண்ணாமலைக்குச் சென்றனர். கிரிவலப் பாதையிலுள்ள எம லிங்கம் கோவில் அருகே அவர் கள் மாறுவேடத்தில் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர்.

அப்போது கடத்தல்காரர் கள் ஐம்பொன் சிலைகளை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்ய விலைபேசியுள்ளனர். ஒளிந்திருந்த போலிசார் இதனைக் கவனித்தனர். உடனடி யாக சிலை கடத்தல் கும்பலைச் சுற்றிவளைத்து அத்தனை பேரையும் கையும்களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஐந்து ஐம்பொன் சிலைகளும் பச்சை மரகத சிவன் சிலை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. சிவன் சிலை சுமார் 1,300 ஆண்டு பழமையானது என்று நம்பப்படு கிறது.