மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் ஜெய் மீண்டும் கைது

மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் ஜெய் மீண்டும் கைது

1 mins read
44ad916b-7e32-4cbb-927f-601939ef741f
-

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ஜெய் மதுபோதையில் கார் ஓட்டிய தற்காகக் கைது செய்யப்பட்டார். வெங்கட்பிரபு இயக்கும் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப் பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக்குழு சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 'பார்ட்டி' (உற்சாக விருந்து) அளித்ததாகவும் அதில் நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி உள்பட பலர் கலந்துகொண்டதாகவும் ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்தது. விருந்து முடிந்ததும் இந்திரா நகரில் உள்ள வீட்டுக்குச் செல் வதற்காக ஜெய் தமது அவ்டி காரில் நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பியுள் ளார். போதையில் ஓட்டியதால் ஜெய் தமது கட்டுப்பாட்டை இழந் ததில் கார் அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதி காலை 2 மணியளவில் நடந்த இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜெய் உள்ளிட்ட அனைவரும் உயிர்தப்பினர். மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.