ஜோலார்பேட்டை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் (படம்) 26 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த மாதம் 24ஆம் தேதி பரோலில் விடுவிக்கப் பட்டார். அவரது தந்தை குயில்தாச னின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு மாத பரோல் அனு மதிக்கப்பட்டது. ஜோலார்பேட்டையி லுள்ள தமது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்து வருகிறார் கள். பரோலில் வெளிவந்த நாளிலிருந்து நேற்று முன்தினம் வரை 1,657 பேர் பேரறிவாளனைச் சந்தித்துள்ளனர். பேரறிவாளன் பரோல் அனுமதி நாளையுடன் முடிவடைகிறது. நாளை மாலை 5 மணிக்குள் வேலூர் சிறையில் அவரை மீண்டும் அடைப்பதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பரோல் முடிகிறது; பேரறிவாளனை மீண்டும் சிறையிலடைக்க தீவிரம்
1 mins read
-

