பரமக்குடி மாவோயிஸ்ட் கேரளாவில் கைது

பரமக்குடி மாவோயிஸ்ட் கேரளாவில் கைது

1 mins read

கோவை: தமிழக=கேரளா எல்லைப் பகுதியான அகளி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரைக் கேரள காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவர் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 2015ஆம் ஆண்டில் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமானவர் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து காளிதாஸிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக=கேரள வனப் பகுதி யில் மாவோயிஸ்ட் இயக்கத்தி னரின் செயல்பாடுகள் அதிகரித் துள்ளன. குறிப்பாக, தமிழக= கேரள=கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் இயக்கத்தைப் பலப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் போலிஸ் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.