திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே 50 அடி உயர பாலத்திலிருந்து கார் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஐவர் மாண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளை யம் பகுதியிலிருந்து ஒரு சொகுசு கார் கோவையை நோக்கிச் சென்றது. காரில் ஓட்டுநர் உள்பட ஆறு பேர் பயணம் செய்தனர். இவர்கள் நேற்றுக் காலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் கோவை=ஈரோடு ஆறுவழிச் சாலையில் சென்றுகொண் டிருந்தனர். அப்போது எதிர்த்திசையில் அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பேருந்துடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்துடன் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஐந்து பேர் அந்த இடத்திலேயே மாண்டனர். பலத்த காயங்களுடன் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். தகவல் அறிந்ததும் அவி நாசி போலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காருக்குள் இருந்த ஐந்து உடல்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் நாமக்கல் பள்ளிப் பாளையம் அதிமுக ஒன்றியச் செய லாளரும் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவருமான கந் தசாமி (50), திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜேம்ஸ் (55), திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர் கதிர்வேல் (38), ரத்தினம் (48) ஆகிய நால்வர் அடையாளம் காணப்பட்டனர்.
விபத்துக்குள்ளான காரும் அதனுள் சிக்கியிருந்த ஐந்து உடல்களும் மீட்கப்பட்டன. படம்: தமிழக ஊடகம்

