கோஹ்லி: கடினமான ஆடுகளத்திலும் தளராமல் ஆடிய பந்தடிப்பாளர்கள்

கோஹ்லி: கடினமான ஆடுகளத்திலும் தளராமல் ஆடிய பந்தடிப்பாளர்கள்

1 mins read

கோல்கத்தா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடை யி லான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 50 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. "முழுமையான திறனுடன் பந்தடிக்க ஏதுவாக ஆடுகளம் இல்லாததால் கடைசி வரை திருப்புமுனைகள் தேவைப்பட்டன. இதை உணர்ந்த பந்தடிப் பாளர்கள் அதற்கேற்ப செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்," என்று அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்தடிப்பாளர்களைப் பாராட்டினார். இந்த வெற்றியால் அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து போட்டி கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை இந்தூரில் நடக்கவுள்ளது.