நெல்லை: ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 14ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் பணியாற்றும் முருகன், வயது 47, என்பவர் நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது. இந்நிலையில் நெல்லை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி குறித்து விமர்சனம்: அரசு ஊழியருக்கு நீதிமன்ற காவல்
1 mins read

