தி.மலை: பதினாறு வயது சிறு மியைத் திருமணம் செய்த இளை யருக்கு போலிசார் வலைவீசி உள் ளனர். சிறுமியும் தேடப்பட்டு வரும் நிலையில், இருவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் வரவேற்பு விழா நடத்திய புகாரின் பேரில் பெற்றோர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 27 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி இருவரும் குடும்பத்தாருக்குத் தெரியாமல் வெளியூருக்குச் சென்றனர். அங்கு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதையறிந்து தொடக்கத்தில் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் பின்னர் ஒருவருக்கொருவர் சமா தானம் அடைந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இருவருக்கும் திருமண வரவேற்பு விழா நடத்து வது என முடிவானது. கடந்த 15ஆம் தேதி ஏரிக்குப்பம் கிராமத்தி லேயே திருமண வரவேற்பு நடைபெற்றது.

