கடந்த 12ஆம் தேதி தொடங்கி மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கரம் நேற்றுடன் நிறைவடைந் தது. கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு புஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. அதே போல் காவிரிக்கும் நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் மயிலாடு துறையில் காவிரி மகா புஷ்கரம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த துறவிகள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் புஷ்கரம் விழா சிறப்பான ஏற்பாடுகளுடன் தொடங்கியது. தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பக்தர்கள் என புஷ்கரம் நிகழ்வில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: தமிழகத் தகவல் ஊடகம்
புனித நீராடிய 10 லட்சம் பேர்
1 mins read
-

