நியூயார்க்: பயங்கரவாதம் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐநா பொதுப் பேரவையின் 72வது கூட்டத்தில் பரஸ்பரம் புகார் தெரிவித்துக்கொண்டன. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக நியூயார்க் நகரில் அக்கூட்டத்தில் சனிக்கிழமை உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார். இதற்குப் பதிலடியாக நேற்று அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரச் செயலாளர் லோதி, "தெற்கு ஆசியாவில் பயங்கரவாதத் திற்குத் தாயாக இந்தியா திகழ்கிறது. காஷ்மீர், இந்தியா வின் ஒரு பகுதி அல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற் பட்டுள்ள போர் நிறுத்த உடன் பாடுகளை இந்தியா மீறி வருகிறது. இதை உலக நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தடுக்கவேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தியா- பாகிஸ்தான் பரஸ்பர புகார்
1 mins read

