பாட்னா: பீகார் மாநிலத்தில் பெகுசாரய் என்ற மாவட்டத்தில் உள்ள நுருலாபூர் என்ற ஊரில் செயல்படும் கஸ்தூரிபாய் அவசியா வித்யாலயா பள்ளிக்கூடத்தின் ஊழியர் கஹாஷா நாஸ் என்பவரின் கைபேசி காணாமல் போய்விட்டது. அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்த மாணவிகள் மீது சந்தேகப்பட்ட அந்தப் பள்ளிக்கூட ஊழியர், இந்த மாணவிகளின் கைகளில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி இப்படி கொடுமைப்படுத்திவிட்டார் என்று புகார் கிளம்பியது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடக்கிறது. பள்ளிக்கூட ஊழியர் வேலையிலிருந்து விலக்கப்பட்டு இருக்கிறார். படம்: இந்திய ஊடகம்
கைபேசியைக் காணவில்லை; அப்பாவிகளுக்குத் தண்டனை
1 mins read
-

