ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள வெடி தொழிற்சாலை ஒன் றில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சேமித்து வைத்திருந்த வெடிபொருளில் மூண்ட தீயில் குறைந்தது 8 பேர் உடல் கருகி இறந்ததாகவும் 25 பேர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தக வல்கள் வெளியாகியுள்ளன. தீ முழுவதுமாக அணைக்கப் பட்டு இடிபாடுகள் அகற்றப்பட் டால் மட்டுமே பலி எண்ணிக்கை, சேத விவரங்கள் துல்லியமாகத் தெரியவரும் என்று போலிசார் கூறினர். தீ விபத்துக்கான கார ணமும் விசாரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு ரூ.2 லட்சம் பணமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பணமும் நஷ்டஈடாக வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் அறிவித் துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். "ஜாம்ஷெட்பூரில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமார் துபி கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததில் அறுவர் கொல் லப்பட்டனர்," என்று போலிஸ் உயர் அதிகாரி பிரபாத் குமார் கூறினார்.
வெடி கிடங்கில் தீ விபத்து; 8 பேர் பலி; 25 பேர் காயம்
1 mins read

