பெங்களூரு: கர்நாடகாவின் முன் னாள் காங்கிரஸ் முதல்வரும் அண்மையில் பாஜகவில் இணைந் தவருமான எஸ்.எம். கிருஷ்ணா வின் மருமகன் வி.ஜி. சித்தார்த் தாவின் வீடு, அலுவலகங் களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனையில் ரூ.650 கோடி பணம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த பணம் கணக்கில் காட் டப்படாத சட்டவிரோத பணம் என் றும் இந்தப் பணத்திற்கு கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமை யாளர் சித்தார்த்தா வரி கட்ட வில்லை என்றும் கூறப்படுகிறது. கர்நாடகா, சென்னை, மும்பை, சிக்மகளூர் உள்ளிட்ட 25 இடங் களில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நடந்து வந்த சோதனையில் இந்தப் பணம் பிடிபட்டுள்ளது.
"சுமார் 650 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சித்தார்த்தா ஒப்புக்கொண்டதை அடுத்து சோதனை முடிவுக்கு வந்தது. கணக்கில் வராத பணம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது," என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "காஃபி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தவிர மேலும் பல விதிமீறல்களில் சித்தார்த்தா ஈடுபட்டுள்ளார். இதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவை தொடர்பான ஆவணங்கள் உள்ளன. அவற்றின் மீது உட னடி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அதிகாரிகள் கூறினர்.

