ஐநா மன்றத்தில் தவறான புகைப்படத்தைக் காட்டி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதர்

ஐநா மன்றத்தில் தவறான புகைப்படத்தைக் காட்டி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதர்

1 mins read

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் இந்தியா மீது குற்றம் சாட்டிய பாகிஸ்தான் தூதர், அதற்கு ஆதாரமாக போலி யான புகைப்படத்தைக் காட்டி சிக்கிக்கொண்டார். ஐநா பொதுச் சபைக் கூட்டத் தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி குற்றஞ்சாட்டின. "இந்தியா தொழில்நுட்ப, நிர்வாக வல்லுநர்களை உருவாக்கி வருகிறது. ஆனால், பாகிஸ் தானோ பயங்கரவாதிகளை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால், பாகிஸ்தானை 'டெர ரிஸ்தான்' என இனி அழைக்க லாம்," என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது உரையின்போது பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த பாகிஸ்தான், காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியது. அதற்கு ஆதாரமாக, இந்திய ராணுவத்தினர் நடத்திய குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் எனக் கூறி, முகம் முழுவதும் காயமடைந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஐநா பொதுச் சபையில் காட்டினார் பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி. "இதுதான் இந்திய ஜனநாய கத்தின் முகம்," என்றும் லோதி குறிப்பிட்டார்.