சுரங்கப்பாதையில் சுவர் மீது மோதிய பேருந்து; 10 பேர் காயம்

சுரங்கப்பாதையில் சுவர் மீது மோதிய பேருந்து; 10 பேர் காயம்

1 mins read
9e285990-2d5a-404b-a823-17dc5eb4274c
-

சென்னை: சென்னையில் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சுவர் மீது மோதியது. இதனால் பயணிகள் அலறிய தால் சுற்றுவட்டாரத்தில் பதற்றம் ஏற்பட்டது. சென்னை பாரிமுனை அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் பத்து பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சென்னை கண்ணகி நகரி லிருந்து புறப்பட்ட '102கே' எண் பேருந்து அடையாறு, மெரினா வழியாக பிராட்வே சென்றுகொண் டிருந்தது. பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை ஓட்டுநர் நிறுத்த முயற்சி செய்தபோது சுரங்கப் பாதையில் உள்ள சுவர் மீது மோதியது.

இதன் காரணமாக பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். சுவர் மீது மோதியதும் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இந்தச் சம்பவத்தில் பத்து பயணிகள் காயம் அடைந்தனர். இதற்கிடையே இந்த விபத்து காரணமாக சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. மேலும் குறுக்கும் நெடுக்குமாக மோதி நின்ற பேருந்தை அகற்று வதற்காக பாரந்தூக்கிகள் வர வழைக்கப்பட்டன. போக்குவரத்து மாற்று திசைக்கு திருப்பிவிடப் பட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரிய வில்லை. சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்ற னர்.

சென்னை சுரங்கப்பாதையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பத்து பயணிகள் காயம் அடைந்தனர். படம்: தமிழக ஊடகம்