சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அண்மையில் வாகன ஓட்டுநர்கள் தங்களுடன் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற நடை முறையை அரசு கட்டாயமாக்கியது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப் படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை உயர் அதிகாரிகள், "அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற நடைமுறைக்குப் பின் இதுவரை 8,400 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்படும்," என்றார்.
குடிபோதை ஓட்டுநர்களுக்குச் சிறை
1 mins read

