ஓட்டுநர் தூங்கியதால் ரயில் சேவையில் ஒரு மணி நேரம் தாமதம்

ஓட்டுநர் தூங்கியதால் ரயில் சேவையில் ஒரு மணி நேரம் தாமதம்

1 mins read

பொள்ளாச்சி: ரயில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் ரயில் சேவையில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற் பட்டது. கேரள மாநிலம் பாலக் காட்டில் இருந்து திருச்செந் தூருக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.10 மணிக்கு பொள்ளாச்சி வந்து சேர்ந்தது. இந்த ரயில் 6.15 மணிக்குப் புறப்பட வேண்டும். பொள்ளாச்சி வந்ததும் ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் வேலை நேரம் முடிந்து சென்றுவிட்டனர். ரயிலை இயக்க மாற்று ஓட்டுநர் நாகராஜ் என்பவர் வந்தார். ஆனால் உதவி ஓட்டுநர் பால முருகன் வேலைக்கு வரவில்லை. இதனால் ரயிலை இயக்காமல் ஓட்டுநர் நாகராஜ் காத்திருந்தார். இதற்கிடையே 6.15 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் நின்று கொண்டே இருந்ததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில் விசாரித்தபோது உதவியாளர் பாலமுருகன் ரயில் நிலைய ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.