குடிநீர் வழங்காததைக் கண்டித்து தங்களின் குடும்ப அட்டைகளை வீசி எறிந்த பெண்களால் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேரையூர் அருகே உள்ளது பட்டாளம்மன் நகர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் குடும்ப அட்டைகளை வீசி எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்
குடும்ப அட்டைகளை வீசியெறிந்த பெண்கள்
1 mins read
-

