ஐந்து மாவட்ட மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்ட மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

1 mins read

கிருஷ்ணகிரி: கேஆர்பி அணை நிரம்பியதை அடுத்து கிருஷ்ண கிரி, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதியில் வசிப்பவர்களை பாது காப்பான பகுதிகளுக்குச் செல்லு மாறு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள், கிணறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கேஆர்பி அணை நிரம்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நந்தி மலையில் உற்பத்தியாகும் நீரும், தென் பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஆதாரமாக உள்ளது.