சென்னை: தமிழகத்தில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் தளமாக தமிழகம் மாறிவிடக் கூடாது என்பதை மனதிற் கொண்டு காவல்துறை தீவிர மாகச் செயல்படுவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. வேலூர், ஆம்பூர், குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐஎஸ் ஆதரவாளர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகக் கூறப் படுகிறது.
இதையடுத்து மத்திய, மாநில உளவுத் துறையினர் அப் பகுதிகளில் முகாமிட்டு கண் காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு இந்தியா வில் ஆள் சேர்க்கும், நிதி திரட் டும் பணியில் சிலர் ஈடுபட் டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங் களில் இத்தகைய நடவடிக்கைகள் அதிகளவில் நடந்து வருவதாக மத்திய உளவுத்துறை தெரிவித் துள்ளது. இதையடுத்து மத்திய உளவு அமைப்புகள் இந்த மாநிலங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளன. இதனால் ஐஎஸ் ஆதரவாளர்கள் பலர் சிக்கினர்.

