சென்னை: நடிகர்கள் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரும்போது வரட்டும் என்றும், அப்போது தன் கருத்தை தெரிவிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கமலின் அரசியல் நுழைவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசத்துடன் பதிலளித்த சீமான், "கமல்ஹாசன் போன்றவர்கள் குறித்து கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள்," என்றார்.
தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் அந்தத் தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது. இதுபோன்று என்னிடம் நீங்கள் கேள்வி கேட்பதற்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பற்றிக் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று செய்தியாளர்களிடம் சீமான் கேட்டுக்கொண்டார்.

