பரவிய வதந்தி: புகைப்படம் வெளியிட்ட ஸ்டாலின்

பரவிய வதந்தி: புகைப்படம் வெளியிட்ட ஸ்டாலின்

1 mins read
6aa2f2ac-cbd5-44b2-bbfd-8dbab5251962
-

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நலமாக உள்ளார் என்பதை உறுதிபடுத்தும் விதமாக அவரை திமுக பொதுச்செயலர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீராசாமி சந்தித்துப் பேசும் அண்மைய புகைப்படம் ஒன் றையும் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ளார். உடல்நலம் குன்றி இருப்பதால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் கருணாநிதி உடல்நிலை குறித்து செவ்வாய்க்கிழமை வதந்தி பரவியது. இதையடுத்து மு.க.ஸ்டா லின், அன்பழகன், ஆர்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட் டோர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தனர். கருணாநிதியுடன் உரையாடும் இப்படம் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. படம்: சதீஷ்