சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகி றது. சுமார் 7,000 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். டெங்கி காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழகத் தில் டெங்கி வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 7,000 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவ மனையில் 25 பேர் டெங்கி காய்ச் சலுக்குச் சிகிச்சை பெற்றுவரு கின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் 25 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
"அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் போதுமான வசதி இல்லை. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனால் இதனைச் சரிசெய்ய வேண்டிய அமைச்சர்கள் எந்தத் துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என பார்த்துக்கொண்டுள்ளனர். "ஒருவேளை டெங்கியைப் பரப் பும் கொக்களிடமும் ஏதாவது வாங்கலாமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படா ததே டெங்கி பரவுவதற்குக் கார ணம். உள்ளாட்சித் தேர்தல் நடத் தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணி கள் முறையாக நடந்திருக்கும்," என்று ஸ்டாலின் கூறினார்.

