தண்டவாளத்தில் விரிசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

தண்டவாளத்தில் விரிசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

1 mins read
9b9767db-6ae4-4bfb-9c80-c2f681dfa718
-

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணி யம்பாடி அருகே ரயில்வே தண்ட வாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப் பட்டதையொட்டி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வளையாம்பட்டு ரயில்வே கேட் அருகே சரக்கு ரயில் ஓட்டுநர் ஒருவர் நேற்று அதிகாலை அந்த விரிசலைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து நேற்று அதி காலை 4 மணி முதல் சென்னை மார்க்கத்தில் செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ் பிரஸ், யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், அரக்கோணம் பாசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நூற்றுக் கணக் கான பயணிகள் அவதிக்கு உள் ளாயினர்.

காட்பாடியிலிருந்து சென் னைக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வேலைக்குச் செல் கின்றனர். அதிகாலையில் உரிய நேரத்திற்கு ரயில்கள் வராததால் வழியில் உள்ள ரயில் நிலையங் களில் ஏராளமானோர் காத்திருந்த னர். விரிசலைச் சரிசெய்யும் பணி யில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். 13 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் புதியதாக மாற்றப்பட இருப்பதாகவும் அதன் பின்னரே அனைத்து ரயில்களும் இந்த வழி யில் வழக்கமான வேகத்தில் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டவாள விரிசலைச் சரிப்படுத்தும் பணியில் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம்