ரூ.20 ஆயிரம் கோடி குவித்த தினகரன் குடும்பம்: ஜெயக்குமார்

ரூ.20 ஆயிரம் கோடி குவித்த தினகரன் குடும்பம்: ஜெயக்குமார்

1 mins read

சென்னை: டிடிவி தினகரன் சிறை சென்றது எதற்காக என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருடிவிட்டு சிறைக்குச் சென்றதால் ஒருவர் தியாகியாகி விட முடியுமா என்றும் கேட்டார். அதிமுகவில் இருந்த எல்லோ ரும் ஒன்று சேர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனி கட்சிக்கு எதிராக ஒன்றும் நடக் காது என்றார். தினகரன் மீது பெண்கள் கோபமாக இருப்பதாகவும் சசிகலா குடும்பத்தாரை தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் அவர் தெரி வித்தார். "கடந்த 1991ஆம் ஆண் டுக்கு முன்பாக சசிகலா குடும் பத்தினரின் சொத்து எவ்வளவு? இன்று எவ்வளவு சொத்து இருக்கிறது? கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது.