சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் சென்று, மணிக்கணக்கில் காக்க வைத்து, அவர்களின் கல்வி பாழாக கல்வி அதிகாரிகள் துணை போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "நூற்றாண்டு விழா என்ற பெயரில் எம்ஜிஆரின் புகழ் பாடு வதற்குப் பதில், முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தங்கள் சுய புராணம் பாடி வருகின்றனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலுக்கும் திமுகவை விமர்சிப்பதற்கும் கிடைத்த அரசியல் மேடையாக மாற்றி, அரசு பணத்தைச் செலவு செய்கின்றனர்," என்று ஸ்டாலின் சாடியுள்ளார்.
மாணவர்களின் கல்வி பாழாகக் கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்து
1 mins read

