சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து சென்னை யில் சில இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, மதுரவாயல், அரும்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வியாழக்கிழமை மாலை செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்ற நான்கு அரசு பேருந்துகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சிக்கி ஒரு பெண் பலியானார். மேலும், பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் 50 பேர் காயம் காயமடைந்தனர். இந்த விபத்தால் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து போலிசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்கு பேருந்துகள் மோதல்: பெண் பலி
1 mins read

