இனி பெட்ரோல் வீடு தேடிவரும்

இனி பெட்ரோல் வீடு தேடிவரும்

1 mins read

புதுடெல்லி: கணினி இணையத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் தொடங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். "இணையத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். இணையம் வழி கேட்டால், வீடு தேடி பெட்ரோல், டீசல் வரும். அதற்கான சட்டபூர்வ ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.