மும்பை: மின்கசிவு என வதந்தி, மழை, கூட்ட நெரிசல் போன்ற வற்றால் மும்பையில் ரயில் நிலை யங்களை இணைக்கும் குறுகலான மேம்பால நடைபாலத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 23 பேர் பலி யாகினர். ஆனால், இதுபோன்ற விபத்து நடைபெறும் வாய்ப்புள்ளதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக் கப்பட்டுள்ளது. அதாவது அனில் ககோட்கர் குழு, மும்பை புறநகர் ரயில்களின் கட்டமைப்பு மோசமாக உள்ளதாக 5 ஆண்டுகளுக்கு முன்பே எச் சரித்திருந்ததாகவும் ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக் கால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகச் செய்தி தெரி விக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ரயில் இருப்புப் பாதைகளைக் கடக்க முயன்ற சுமார் 15,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் 40 விழுக்காடு மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டு உள்ளதாகவும் அனில் கட்கோகர் குழு, பிப்ரவரி 2012ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை தெரி விக்கிறது. "மோசமாக உள்ள மும்பை புறநகர் ரயில் நிலைய கட்ட மைப்பைச் சீரமைக்கும் பணியைப் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ள வேண்டும்.
'எல்ஃபின்ஸ்டோன்' மேம்பால நடைபாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி விபத்துக்குள்ளான ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

