எங்கு பார்த்தாலும் அசுத்தம்: சுகாதாரப் பேரழிவை எதிர்நோக்கும் ரோஹிங்யா அகதிகள்

1 mins read

பங்ளாதே‌ஷில் அகதிகளாகத் தஞ் சம் புகுந்துள்ள ரோஹிங்யா மக் கள் தொற்றுநோய்களில் சிக்கும் பேராபத்தில் உள்ளனர். சில வாரங்களில் பல்லாயிரம் மக்கள் மியன்மாரில் இருந்து தப்பிவந்து பங்ளாதே‌ஷில் முகாம்களில் தங்கி உள்ளனர். இப் போதைக்கு குறுகிய காலத்தில் தஞ்சமடைந்த உலகின் ஆகப் பெரிய அகதிகள் கூட்டம் இங்கு தான் உள்ளது. வன்செயல்களுக்கு அஞ்சி கிட்டத்தட்ட அரை மில்லி யன் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அகதிகள் முகாம்களின் நிலைமை மனிதாபிமானத்தை மீறும் வகையில் இருப்பதாக ஐநா மன்றம் எச்சரித்துள்ளது.

அசுத்தமான தண்ணீர், சுகா தாரமற்ற கழிப்பறைகள் ஆகிய வற்றால் ரோஹிங்யா அகதிகள் இடையில் நோய் தொற்றும் அபாயம் நெருங்கி வருவதாகவும் ஐநா உதவிப் பணியாளர்கள் தெரி வித்துள்ளனர். சுகாதாரப் பேரழிவை அம் மக்கள் எதிர்நோக்கி இருப்பதாக வும் அவர்கள் கூறினர். கடுமை யான பருவ மழை நோய்த்தொற்று அபாயத்தை அதிகரித்து உள்ளது. உதவிப் பணிக்காக முகாம் களுக்குச் சென்ற மருத்துவர்களும் அதுபோன்ற கருத்தையே கூறி உள்ளனர்.2017-11-01 06:00:00 +0800