ஓராண்டுக்கு மேலாக முழுநேர ஆளுநர் இல்லாமலேயே தமிழகம் இயங்கி வந்த நிலைமைக்கு மத்தி யில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முடிவு கட்டியுள் ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான ஆளுநர் நிய மனத்துக்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து அவர்களின் பெயர்களை அதிபர் ராம் நாத் கோவிந்த் அறிவித் துள்ளார். தமிழக முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், 77, நியமிக்கப்பட்டு உள்ளார். ஆளுநராக இருந்த ரேசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றார். அப்போது முதல் வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல அதிரடி பரபரப்பு ஏற்பட்டதேடு அசாதாரண சூழ் நிலையும் நிலவி வருகிறது. ஆளும் கட்சியான அதிமுக வில் அதிகாரப்பேட்டி நீடிக்கிறது. தமிழகத்தின் பெறுப்பு ஆளு நராக வித்யாசாகர் ராவ் நியமனம், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகல், அதிமுக பெதுச் செயலாளராக சசிகலா நியமனம், முதல்வராக சசிகலா பதவியேற்க முயன்றது, பின்னர் அவர் சிறை சென்றது, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்எஏக்கள் விலக்கிக் கொண்டது உள்ளிட்ட பல சம்பவங்களை தமிழகம் முதல்முறையாகக் கண்டது.
ஆளுங்கட்சியின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் செயல்படக்கூடாது
1 mins read

