பயங்கரவாதத்துக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் இடம்பெற்ற நீண்டநாள் பங்காளி களுக்கு துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நன்றி தெரிவித்து உள்ளார். அவர்களின் பங்களிப்பு சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் இன்னல்களில் சிக்காமல் பாது காப்பாக இருப்பதற்கு உதவி உள்ளதாகவும் அவர் கூறினார். சமூகத் தொண்டூழியர்களுக் கான உள்துறை அமைச்சின் 13வது பிற்பகல் விருந்து பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு டியோ, "பயங்கரவாத மிரட்டல் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. "தாக்குதல்களுக்கான சாத் தியங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க நமது பாது காப்பு அமைப்புகள் கடினமாகப் பணியாற்றி வருகின்றன.
"அதேநேரம் சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப் பாக வைத்திருக்க வலுவான சமூக ஆதரவும் தேவைப்படு கிறது. கடந்த 2001ஆம் ஆண்டு ஜமா இஸ்லாமியா துடைத் தொழிக்கப்பட்ட பின்னர் இங் குள்ள பாதுகாப்புச் சூழல், பயங் கரவாத மிரட்டலை உச்சமட்டத் தில் வைத்துள்ளது. "கடந்த 2015ஆம் ஆண்டி லிருந்து 11 சிங்கப்பூரர்கள் தடுத்துவைக்கப்பட்டதோடு ஆறு பேருக்கு கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. சமயத் தீவிர வாத சிந்தனைக்கு உள்ளான வெளிநாட்டினர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்," என்று துணைப் பிரதமர் பட்டிய லிட்டார். சமய மறுவாழ்வுக் குழு, பராம ரிப்புக்குப் பிந்திய சேவைகளுக் கான அனைத்து அமைப்புகளின் குழு போன்றவற்றின் முயற்சி களை அங்கீகரிக்கும் விதமாக பான் பசிபிக் ஹோட்டலில் இப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

