சிவகங்கை: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் முதல்வர் கனவுடன் வலம் வருவதாகவும் தமிழக அரசியல் களத்தில உள்ள வெற்றிடத்தை அவர்களால் நிரப்ப இயலாது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித் துள்ளார். தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆட்சியானது நான்கைந்து நாட்களில் கவிழ்ந்துவிடும் என்றும் காரைக்குடியில் நடை பெற்ற கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். பொறுப்பு ஆளுநர் இருந்தால் ஆட்சியைக் கலைக்கமுடியாது என்பதாலேயே புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிட்ட அவர், தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு இனி மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். "அதே போல் இந்தியா நன் றாக இருக்க வேண்டுமெனில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. ஜெயலலிதா ஆட்சியி லும் ஊழல் இருந்தது.
அப்போது ஏன் நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் குரல் கொடுக்க வில்லை?," என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். ரஜினியும் கமலும் அரசிய லுக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்க ஏராளமா னோர் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், தற்போது தமிழகத் தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்று கூறும் நடிகர் கமல், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கே போயிருந்தார் எனக் கேட்டார். "நிர்வாக அமைப்பு சரியில்லை என்று இப்போது கூறிய ரஜினியும் கமலும் அவருக்கு எதிரான கருத்துகளை அப்போது ஏன் முன்வைக்கவில்லை? "ஆனால் நான் அப்படி அல்ல. ஜெயலலிதா அரசின் ஊழலை நான் மட்டுமே எதிர்த்தேன். அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தேன்.
இவ்வளவு ஏன் கருணாநிதியையும் நான் எதிர்த் துள்ளேன்," என்றார் விஜயகாந்த். மார்டின் லூதர் கிங் போன்று எத்தனை தோல்விகள் வந்தாலும் தம்மால் மீண்டு வரமுடியும் என்று குறிப்பிட்ட அவர், ரஜினியும் கமலும் அரசியலுக்குத் தாரா ளமாக வரலாம் என்றும் அரசியல் களம் எப்படிப்பட்டது என்பது குறித்து இருவருக்கும் தாம் எந்தவித அறிவுரையும் கூறப் போவதில்லை என்றும் கூறினார். "இப்போது புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தமிழகத்தில நான்கைந்து நாளில் நடப்பு ஆட்சி கவிழும்," என்றார் விஜயகாந்த்.

