நாட்டிலேயே பாதுகாப்பான தலைநகரம் சென்னை: புதிய ஆய்வு விவரங்கள்

நாட்டிலேயே பாதுகாப்பான தலைநகரம் சென்னை: புதிய ஆய்வு விவரங்கள்

1 mins read
c0e6f8ae-03cf-43de-a0cb-b4087eefacaf
-

சென்னை: நாட்டிலேயே சென்னைதான் மிகப் பாதுகாப்பான தலைநகரம் என்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 20,597 பேரிடம் கேள்விகள் கேட்டு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சென்னை மக்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தாங்கள் அதிக பாதுகாப்புடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் 9 மணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்பவில்லை என்றால் பதற்றம் அடைவதாக டெல்லியில் உள்ள பெற்றோர்களில் 87 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இதேபோல், பெங்களூருவில் 54%, மும்பையில் 30% பெற்றோர்கள் பதிலளித்துள்ளனர். இந்தக் கேள்விக்கு சென்னையில் உள்ள பெற்றோர்களில் 48 விழுக்காட்டினர் மட்டுமே தங்களுக்குப் பயம் ஏற்படுவதாகக் கூறி இருக்கிறார்கள்.