இந்திய எல்லையோரம் ரகசிய சுரங்கப் பாதை

இந்திய எல்லையோரம் ரகசிய சுரங்கப் பாதை

1 mins read

ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு=காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவி வரும் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. பயங்கரவாதிகளின் ஊடுரு வலை முறியடிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். ஜம்மு அருகே உள்ள அர்னியா பகுதியில் சில தினங்களாக ஊடுருவல் நடைபெற்றதைத் தொடர்ந்து பாது காப்புப் படையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் 14 அடி நீள ரகசிய சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. விஜயதசமி கொண்டாடப்படும் நேரத்தில் ஜம்மு=காஷ்மீருக்குள் ஏராளமான பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் நோக்கத்துடன் இந்தச் சுரங்கப் பாதை அமைக் கப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவ வட்டாரத்தில் கூறப்படு கிறது.

இதன்மூலம் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதி கள் மிக மோசமான நாசவேலை களில் ஈடுபடுவது முறியடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த ஏழு மாதங்களில் எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட இரண்டாவது சுரங்கப்பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.