அரசுக்கு எதிரான அவதூறு: தினகரன் உட்பட 17 பேர் மீது வழக்கு, மூவர் கைது

அரசுக்கு எதிரான அவதூறு: தினகரன் உட்பட 17 பேர் மீது வழக்கு, மூவர் கைது

1 mins read
e9778aa6-310d-43c8-9e3f-359465562d2c
-

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடந்த மாதம் 29ஆம் தேதி சேலத்தில் விநியோகம் செய்யப்பட்ட துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன், புகழேந்தி, வெற்றிவேல் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்ததால் அவர்கள் உட்பட 17 பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏவும் தினகரன் அணியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலம் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்பில் தினகரனும் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்பட்டது. "நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை விலக்குவதற்கு எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை," என்பது போன்ற பல வாசகங்கள் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தன. நாட்டின் இறையாண்மைக்கு எதிரான வாசகங்கள் அந்தப் பிரசுரத்தில் இருந்ததாகக் கூறி அஸ்தம்பட்டி அதிமுக செயலாளர் சரவணன் போலிசில் புகார் செய்தார். வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று கைதான வெங்கடாசலம் கூறியுள்ளார்.