'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்று சொல்லு' - செய்தியாளர்களை வற்புறுத்திய தமிழக அமைச்சர்

'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்று சொல்லு' - செய்தியாளர்களை வற்புறுத்திய தமிழக அமைச்சர்

1 mins read

மதுரை: ஜெயலலிதா என்று குறிப்பிடாமல் 'புரட்சித் தலைவி அம்மா' என்று செய்தியாளர்கள் குறிப்பிட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தி இருப்பது ஊடக வியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டு கேள்வியைக் கேட்டார் செய்தியாளர் ஒருவர். இதனால் கோபமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜு, "அம்மா பெயரைச் சொல்லாதே. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்று சொல்லு," என்று மிரட்டும் தொனியில் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.