காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் : புது ஆளுநருக்கு காத்திருக்கும் சவால்கள்

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் : புது ஆளுநருக்கு காத்திருக்கும் சவால்கள்

1 mins read

சென்னை: தமிழகத்தில் புதிய ஆளுநராக வரும் 6ஆம் தேதி அன்று பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவ னித்து வந்த நிலையில், தமிழகத் தில் அரசியல் குழப்பங்கள் தலை தூக்கின. இதையடுத்து நிரந்தர ஆளுநரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இரு தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை புதிய ஆளுநரிடம் வழங்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், புதிய ஆளு நர் ஏராளமான சவால்களைச் சந் திக்க வேண்டி உள்ளது என்றார். "தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத சட்டப்பேரவை உள்ளது. மாநிலத்தில் நாளுக்கு நாள் ஊழல் பெருகி வருகிறது. விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படவில்லை. "தமிழகம் முழுவதும் டெங்கிக் காய்ச்சலால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். "இதுபோன்ற சவால்களைப் புதிய ஆளுநர் சந்திக்க வேண்டி உள்ளது," என்றார் திருநாவுக்கரசர்.