இந்தியப் பிரதமர் ஒரு பயங்கரவாதி என்கிறது பாகிஸ்தான்

இந்தியப் பிரதமர் ஒரு பயங்கரவாதி என்கிறது பாகிஸ்தான்

1 mins read
50224341-d4c4-46d7-a834-0689859aec4c
-

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான வார்த்தைப் போர் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை பயன்படுத்தாத கடுமையான வார்த்தைகளை பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் 'ஜியோ' தொலைக் காட்சியிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தியாவை சரமாரியாகச் சாடினார். "ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயங்கரவாதி களை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாகக் கூறி உள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரது நாட்டின் பிரதமர் (மோடி) ஒரு பயங்கரவாதி. "குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் களின் ரத்தக்கறை அவரது (மோடியின்) கரங்களில் உள்ளது. ஒரு பயங்கரவாத கட்சிதான் இந்தியாவில் ஆட்சி புரிகிறது.

ஆர்எஸ்எஸ் ஆட்சி அங்கு நடக்கிறது," என்றார் திரு ஆசிஃப். இருப்பினும், பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் கடப்பாடு தமது நாட்டுக்கு இருப்பதாக வும் அதற்குச் சில காலம் பிடிக்கும் என் றும் அண்மையில் அவர் கூறியிருந்தார். மும்பை தாக்குதலை நடத்திய ஹஃபிஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளை பாகிஸ் தான் உருவாக்கியதாகக் கூறப்படுவதை ஏற்க இயலாது என்றும் திரு ஆசிஃப் தெரிவித்திருந்தார்.