சென்னை: தமிழக அரசு டெங் கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத் தும் விதமாக கொசுக்களை துடைத்தொழிக்கும் நடவடிக் கைக்கு ரூ.16 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். "தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் முதல் ஒவ்வொரு வியாழக்கிழ மையும் டெங்கிக் கொசு ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும். "டெங்கிக் காய்ச்சலுக்கு இது வரை 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் டெங்கி கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக் கப்படும்," என்றார் விஜயபாஸ்கர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சித்த மத்திய ஆய்வு நிலையத்தில் நிலவேம்புக் குடிநீர் தயார்செய்யும் ஊழியர்கள். படம்: டெக்கான் குரோனிக்கல் - என்.சம்பத்

