மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன் ஆகியோர் தண்ணீரைத் திறந்து மலர் தூவினர். தற்போது விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 94.84 அடியாகவும் நீர் இருப்பு 58.35 டிஎம்சியாகவும் இருந்தது. காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். படம்: தகவல் ஊடகம்
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
1 mins read
-

